தர்மபுரி மாவட்டத்துக்கு இலவச டெலிவரி · Free delivery in Dharmapuri

டெலிவரியில் பணம் செலுத்தலாம் · Cash on Delivery

8+ ஆண்டு கள அனுபவம் · 8+ years field experience

Skip to content

DripCart Irrigation Products · Call / WhatsApp +91 7010302247

Drip Irrigation Subsidy Tamil Nadu 2026 – சொட்டு நீர் பாசன மானியம் பெறுவது எப்படி?

சுருக்கமான பதில்: Tamil Nadu-ல PMKSY (Per Drop More Crop) திட்டத்தின் கீழ் drip / sprinkler அமைக்க small & marginal farmers-க்கு 100% மானியம், மற்ற விவசாயிகளுக்கு 75% மானியம் வழங்கப்படுகிறது (அதிகபட்சம் 5 ஹெக்டேர்). சிட்டா, அடங்கல், FMB, ஆதார், மண் & நீர் பரிசோதனை அறிக்கையுடன் உங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். Source: Krishnagiri மாவட்ட இணையதளம் – PMKSY.

யாருக்கு எவ்வளவு மானியம்?

விவசாயி வகை மானியம்
சிறு & குறு விவசாயிகள் (Small / Marginal – SF/MF) 100%
மற்ற விவசாயிகள் 75%
அதிகபட்ச பரப்பு 5 ஹெக்டேர் (சுமார் 12.35 ஏக்கர்) – ஒரு பயனாளிக்கு
மீண்டும் மானியம் 7 ஆண்டுகளுக்கு பிறகு (7 ஆண்டுக்கு பின் lateral மாற்றலுக்கு விதிவிலக்கு)

குறிப்பு: மானிய விதிமுறைகள் ஆண்டுதோறும் மாறலாம். Apply செய்வதற்கு முன் உங்கள் வட்டார தோட்டக்கலை அலுவலகத்தில் சமீபத்திய விவரங்களை உறுதி செய்யுங்கள்.

தேவையான ஆவணங்கள் (Checklist)

  • சிட்டா & அடங்கல் (Chitta & Adangal)
  • FMB வரைபடம் (FMB Sketch)
  • ஆதார் அட்டை
  • மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கை
  • சிறு / குறு விவசாயி சான்றிதழ் (SF/MF Certificate) – 100% மானியத்துக்கு
  • குத்தகை நிலம் என்றால் – 7 ஆண்டு பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம் (நிலம் & நீர்)
  • Passport size photo – 3

Print எடுக்க எளிதான பட்டியல்: DripCart – Subsidy Documents.

Apply செய்யும் முறை – படிப்படியாக

  1. ஆவணங்கள் தயார் செய்யுங்கள் – மேலே உள்ள பட்டியல்படி. பெயர், சர்வே எண் எல்லா ஆவணங்களிலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்.
  2. மண் & நீர் பரிசோதனை – அருகிலுள்ள மண் பரிசோதனை நிலையத்தில் செய்யுங்கள்.
  3. Drip design & BOQ – உங்கள் பயிர், நில அளவுக்கு ஏற்ப system design. DripCart TANHODA rate-ல் BOQ தயார் செய்து தரும்: Free Drip Estimate.
  4. தோட்டக்கலை அலுவலகத்தில் விண்ணப்பம் – உங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் (Assistant Director of Horticulture) அலுவலகத்தில் ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும்.
  5. Field inspection & approval – அலுவலர்கள் வயலை பார்வையிட்டு ஒப்புதல் தருவார்கள்.
  6. Installation & சரிபார்ப்பு – system அமைத்த பிறகு அலுவலர் சரிபார்ப்பு, பின் மானியம் விடுவிப்பு.

செயல்முறை மாவட்டத்துக்கு மாவட்டம் சிறிது மாறலாம். தேசிய அளவிலான திட்ட விவரம்: myScheme – PMKSY Per Drop More Crop | TN Horticulture Department.

தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள்

  • சிட்டாவில் ஒரு பெயர், ஆதாரில் வேறு spelling – முன்பே சரி செய்யுங்கள்.
  • நீர் பரிசோதனை இல்லாமல் filter தேர்வு – dripper அடைப்புக்கு காரணம். பார்க்க: Filter Guide.
  • ஏற்கனவே 7 ஆண்டுக்குள் மானியம் பெற்ற நிலத்துக்கு மீண்டும் apply செய்வது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

Tamil Nadu-ல drip irrigation-க்கு எவ்வளவு subsidy?

சிறு & குறு விவசாயிகளுக்கு 100%, மற்றவர்களுக்கு 75%, அதிகபட்சம் 5 ஹெக்டேர் வரை.

குத்தகை நிலத்துக்கு மானியம் கிடைக்குமா?

கிடைக்கும் – 7 ஆண்டு பதிவு செய்யப்பட்ட நிலம் & நீர் குத்தகை ஒப்பந்தம் தேவை.

ஏற்கனவே மானியம் வாங்கியிருந்தால் மீண்டும் கிடைக்குமா?

7 ஆண்டுகளுக்கு பிறகுதான் மீண்டும் கிடைக்கும். 7 ஆண்டுக்கு பின் lateral மாற்றுவதற்கு விதிவிலக்கு உண்டு.

Dharmapuri-ல subsidy apply செய்ய யார் உதவுவார்கள்?

DripCart (Nallampalli, Dharmapuri) – BOQ, ஆவண வழிகாட்டல், installation உதவி. WhatsApp 70103 02247. விவரம்: Dharmapuri & Krishnagiri subsidy உதவி.

மானியத்துடன் drip போட ready-ஆ? நில அளவு & பயிர் விவரத்தை WhatsApp 70103 02247-க்கு அனுப்புங்கள். மேலும் படிக்க: Drip Irrigation Dharmapuri – முழு வழிகாட்டி | 1 ஏக்கர் Drip செலவு.